பரம்பிக்குளம் பொதுப்பணித்துறையில் பணிசெய்து வந்த ஊழியர் கோபு என்பவரின் இறுதிச் சடங்குக்கு சக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் பரம்பிக்குளம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். லாரியில் 40 பேர் பயணித்துள்ளனர். மலைப் பாதையில் லாரி சென்றுகொண்டிருந்தபோது, வனவிலங்கு ஒன்று சாலையைக் கடந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் தீடீரென பிரேக் அடித்தார். அப்போது லாரி மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் லாரியில் பயணித்த 23 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆனைமலை ஆல்வா மருத்துவமனை, பொள்ளாச்சி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பரம்பிக்குளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.