எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருநள்ளாறு நளன் குளத்தில் குளித்த பொள்ளாச்சி பக்தர் சாவு

காரைக்கால், மே 19 : திருநள்ளாறு நளன் குளத்தில் குளித்த பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவது :  பொள்ளாச்சியை சேர்ந்த நாச்சியப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:21 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், மே 19 : திருநள்ளாறு நளன் குளத்தில் குளித்த பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவது :  பொள்ளாச்சியை சேர்ந்த நாச்சியப்பதேவர் மகன் கருப்பசாமி (45). இவர் உள்பட அந்த பகுதியை சேர்ந்த சுமார் 50 பேர் ஒரு பேருந்தில் 17-ம் தேதி புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு திருநள்ளாறு வந்தனர்.

அங்கு தங்கிய இவர்கள் சனிக்கிழமை ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க செல்லும் முன் நளன் குளத்தில் இறங்கி நீராடினர். குளத்தில் இறங்கியவர்கள் அனைவரும் கரையேறிவிட்ட நிலையில், கருப்பசாமி மட்டும்  கரையேறாதது தெரிந்து மற்றவர்கள் அவரை தேடினர். போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உயிரிழந்த நிலையில் கருப்பசாமி உடல் குளக்கரையில் ஒதுங்கியது. இவருக்கு இதய நோய் இருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாமென கூறப்படுகிறது. இதுகுறித்து திருநள்ளாறு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.