மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிதம்பரத்தில் மர்மஆசாமிகள் வீடுபுகுந்து தாக்கி 22 பவுன் நகை கொள்ளை

சிதம்பரம் அண்ணாமலைநகரில் மர்மஆசாமிகள் வீடுபுகுந்து ஒருவரை தாக்கி 22 பவுன் நகைகள் கொள்ளையடித்து தலைமறைவாயினர்.

News image
Updated On :2 நவம்பர் 2012, 8:34 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் மர்மஆசாமிகள் வீடுபுகுந்து ஒருவரை தாக்கி 22 பவுன் நகைகள் கொள்ளையடித்து தலைமறைவாயினர்.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ஆட்டாநகரில் வசிப்பவர் கணபதி சுப்பிரமணியன் (45). இவர் சிதம்பரத்தில் ஆடிட்டர் அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிகிறார். வியாழக்கிழமை இரவு குடும்பத்தினர் அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி வாங்க சிதம்பரத்திற்கு சென்றனர். அப்போது வீட்டில் கணபதி சுப்பிரமணியன் மட்டும் தனியாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்மஆசாமிகள் வீட்டிற்குள் நுழைந்து கணபதிசுப்பிரமணியனை தாக்கி, வீட்டிலிருந்து 22 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். தலையில்  காயமுற்ற கணபதி சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.