47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை: பாசன வயல்களில் ஓ.என்.ஜி.சி பெட்ரொலிய எண்ணெய் கசிவு: ஜெயந்தி நடராஜன் ஆய்வு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாய்களில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் பாசன வயல்கள், வாய்க்கால்கள் அதிகம் பாதிக்கப்பட்டன.

News image
Updated On :6 நவம்பர் 2012, 6:18 am

சங்கர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாய்களில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் பாசன வயல்கள், வாய்க்கால்கள் அதிகம் பாதிக்கப்பட்டன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமான வயல்கள், பாசன வாய்க்கால்களில் கச்சா எண்ணெய் கலந்தது. இது குறித்து விவசாயிகள் புகார்களைத் தெரிவித்தனர். இதை அடுத்து மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இன்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் வந்தார்.  பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். மேலும் கீழ்வேளூர் காருகாகுடி பகுதியில் உள்ள நிலங்களைப்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இது குறித்து ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போன்ற பிரச்னை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் தடுக்க பெட்ரோலிய அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். மேலும், இது போன்ற எண்ணெய்க் கசிவுகளால் நீர்நிலைகளும் சுற்றுச் சூழலும் அதன் காரணத்தால் மக்களும் பாதிக்கப்பட நேரிடுகிறது. தற்போது, இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார் ஜெயந்தி நடராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.