மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காசு வைத்து சூதாடிய 7 பேர் கைது: ரொக்கம் ரூ.45 ஆயிரம் பறிமுதல்

சிதம்பரத்தில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்

News image
Updated On :11 நவம்பர் 2012, 4:06 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை நகர போலீஸார்  கைது செய்தனர்

சிதம்பரம் வேணுகோபால் தெருவில் உள்ள தனியார் விடுதியில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக நகர போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கொத்தங்குடியை சேர்ந்த வனராஐன் (30), அண்ணாமலைநகரை சேர்ந்த தங்கமணி(25), வடக்குதில்லைநாயகபுரத்தை சேர்ந்த முகுந்தன்(30), கோபு(32), மீனவர் காலணியை சேர்ந்த உதயகோபி(31), சிதம்பரம் வண்டிகேட்டை சேர்ந்த நடராஐன்(37), வடக்கு வடுகத் தெருவைச் சேர்ந்த பாலு(41) ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ரு.45 ஆயிரம் பணம் மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.