மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் நவ.26 முதல் தொடக்கம்: துணைவேந்தர் எம்.ராமநாதன் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மாணவர்களுக்கான தேர்வுகள் நவ.26-ம் தேதியும்,

News image
Updated On :17 நவம்பர் 2012, 2:58 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மாணவர்களுக்கான தேர்வுகள் நவ.26-ம் தேதியும், மற்ற அனைத்து புல மாணவர்களுக்கான தேர்வுகள் நவ.30-ம் தேதியும் தொடங்கப்படுகிறது என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தினால் பல்கலைக்கழக வகுப்புகளும், தேர்வுகளும் காலவரையற்று ஒத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தேர்வுகள் நடைபெறும் தேதியையும், வகுப்புகள் தொடங்கும் தேதியையும் அறிவித்துள்ளார்.

விவரம்: மருத்துவப்புலம் மற்றும் பல் மருத்துவப்புலம், பிஎட் மற்றும் அனைத்துறை ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற நவ.21-ம் தேதி முதல் தொடங்கப்படும். வேளாண்புல முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு டிச.14-ம் தேதியும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு டிச.5-ம் தேதியும் எழுத்துத்தேர்வுகள் (Theory Exam) தொடங்கப்படும். வேளாண்புல மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் (Practicle Exam) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவ.26-ம் தேதியும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நவ.21-ம் தேதியும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு நவ.26-ம் தேதியும் தொடங்கப்படும். மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையத்தளம் www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம் என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.