சிதம்பரத்தில் வர்த்தக நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு! கேரி பேக்குகள் பறிமுதல்
சிதம்பரம் நகரில் வர்த்தக நிறுவனங்களில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னு செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


சிதம்பரம் நகரில் வர்த்தக நிறுவனங்களில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னு செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையில் செவ்வாய்க்கிழமை டெங்கு காய்ச்சல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்று சிதம்பரம் வழியாக கடலூர் திரும்பினார். அப்போது சிதம்பரம் மேலரதவீதியில் திடீரென காரை நிறுத்தச் சொல்லி இறங்கி தனியாருக்கு சொந்தமான பாத்திரக்கடைக்குள் நுழைந்தார். அங்கு வைத்திருந்த கேரி பேக்குகளை பறிமுதல் செய்தார். பின்னர் அதே கடையில் மாடிக்கு சென்று குடிநீர் தேக்கத் தொட்டி அசுத்தமாக இருப்பதை பார்வையிட்டு, அதனை சுத்தம் செய்யுமாறு கடை உரிமையாளரிடம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்தார். பின்னர் வெற்றிலைக்கடை மற்றும் பூக்கடை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு கேரி பேக்குகளை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்தார். பின்னர் ஆட்சியர் காரில் ஏறி கடலூர் புறப்பட்டு சென்றார். மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கையால், வர்த்தக நிறுவனங்களில் உள்ள கேரி பேக்குகளை அவர்களே அப்புறப்படுத்தினர். ஆய்வின் போது உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன், வட்டாட்சியர் க.தனசிங், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...