கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நடராஜர் கோயில் உண்டியலில் ரூ.5.16 லட்சம் காணிக்கை

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நவம்பர் 21-ம் தேதி புதன்கிழமை 20-வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.5.16 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது...

News image
Updated On :21 நவம்பர் 2012, 12:23 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நவம்பர் 21-ம் தேதி புதன்கிழமை 20-வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.5.16 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது. இதுவரை மொத்தம் ரூ.1.5 கோடி உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்துள்ளது.

÷நடராஜர் கோயிலை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத் துறை கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கையகப்படுத்தி புதிய நிர்வாக அலுவலரை நியமித்தது. பின்னர் பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே முதல்முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக கோயிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டன.

÷தற்போது புதன்கிழமை இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, செயல்அலுவலர் க.சிவக்குமார், ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் 20-வது முறையாக உண்டியல் எண்ணப்பட்டது.

÷இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 9 உண்டியல்களை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 5.16 லட்சம் கிடைத்தது.

÷மேலும் உண்டியலில் மலேசியா ரிங்கட்- 23, சிங்கப்பூர் டாலர்- 4, யு.எஸ்.ஏ. டாலர்-1 ஆகியவை இருந்தன. உண்டியல் வைக்கப்பட்டு 4 ஆண்டுகளில் இதுவரை 20 முறை உண்டியல் எண்ணியதில் மொத்தம் ரூ.1.5 கோடி கிடைத்துள்ளது என செயல்அலுவலர் க.சிவக்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.