திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச சுவாமிகள் காலமானார்
23வது பட்டம் குருமகாசந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் இன்று அதிகாலை 2 மணி அளவில்


நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதினம் 23வது பட்டம் குருமகாசந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் இன்று அதிகாலை 2 மணி அளவில் காலமானார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அண்மையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இடையில் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்காக மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் ஆதீனம் திரும்பிய அவருக்கு நேற்று இரவு மீண்டும் உடல்நலக் குறைவு அதிகரிக்கவே ஆடுதுறைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியில், அவர் உயிர் பிரிந்தது.
தமிழ் வளர்த்த சைவ மடங்களில் தலையாயது திருவாவடுதுறை ஆதீனம். சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய சைவ மடம். நெடிய பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 23 வது பட்டத்தை அலங்கரித்தவர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...