சிதம்பரத்தில் இருசக்கர வாகன விபத்தில் மாணவர் சாவு: மற்றொரு மாணவர் படுகாயம்
சிதம்பரம் நகரில் சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இருமாணவர்கள் ரயில்வே மேம்பாலத்தின் தடுப்புக்கட்டையில் மோதி கீழே விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒரு ...


சிதம்பரம் நகரில் சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இருமாணவர்கள் ரயில்வே மேம்பாலத்தின் தடுப்புக்கட்டையில் மோதி கீழே விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சிதம்பரம் எஸ்.பி.கோயில்தெருவைச் சேர்ந்த சீனுவாசன் மகன் கோதண்டபாணி (17). பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படிக்கும் இம்மாணவரும், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த நந்தனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படிக்கும் மாணவர் சரவணன் (18) ஆகிய இருவரும் சனிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் அண்ணாமலைநகர் சென்று திரும்பியுள்ளனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தின் இறக்கத்தில் உள்ள தடுப்புக்கட்டையில் அவர்களது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மாணவர் கோதண்டபாணி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மற்றொரு மாணவரான சரவணன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...