கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் போலீஸ்காரர்களை தாக்கி குற்றவாளி தலைமறைவு: மருத்துவமனையில் போலீஸார்

சிதம்பரம் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக பழைய குற்றவாளியை போலீஸார் பிடிக்கச் சென்றனர். அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு அக்குற்றவாளி

News image
Updated On :24 நவம்பர் 2012, 5:03 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக பழைய குற்றவாளியை போலீஸார் பிடிக்கச் சென்றனர். அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு அக்குற்றவாளி தலைமறைவானார். இதில் காயமடைந்த இரு போலீஸார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக சகஜானந்தாதெருவில் வசிக்குமஶ்ரீ் பழைய குற்றவாளி வெற்றிச்செல்வன் (24) வீட்டிற்கு சென்றனர். அப்போது ஜன்னல் வழியாக பாட்டிலால் போலீஸாரை தாக்கியுள்ளார். அதில் பிரபு (25) என்ற போலீஸ்காரர் முகத்தில் காயமுற்றார்.  பின்னர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த போது குமரேசன் (33) என்ற போலீஸ்காரரை, வெற்றிச்செல்வன் அரிவாள்மனையால் தாக்கிவிட்டு தலைமறைவானார்.  முகத்தில் காயமடைந்த போலீஸ்காரர் பிரபு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரிவாள்மனையால் வெட்டுபட்ட மற்றொரு போலீஸ்காரரான குமரேசன் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலையில் 4 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான வெற்றிச்செல்வனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.