கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காட்டுமன்னார்கோயில் அருகே பிடிபட்ட 8 அடி நீள ராட்சத முதலை

காட்டுமன்னார்கோயில் அருகே மெயின்ரோட்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் படுத்துக் கிடந்த 8 அடி நீளமுள்ள ராட்சத முதலையை தீயணைபபு மீட்புத்துறை மற்றும் வனத்துறையினர் புதன்கிழமை பிடித்தனர்.

News image
Updated On :28 நவம்பர் 2012, 12:09 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே மெயின்ரோட்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் படுத்துக் கிடந்த 8 அடி நீளமுள்ள ராட்சத முதலையை தீயணைபபு மீட்புத்துறை மற்றும் வனத்துறையினர் புதன்கிழமை பிடித்தனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே ஓமாம்புலியூர் மெயின்ரோட்டில் ராட்சத முதலை ஒன்று படுத்துக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் தீயணைப்பு மீட்புத்துறையினர் அங்கு சென்று சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் படுத்திருந்த 8 அடி நீளமுள்ள, சுமார் 600 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்து கட்டிப் போட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் உத்தரவின்படி வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் ஆகியோர் சென்று முதலையை பெற்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்க குளத்தில் கொண்டு விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.