எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் அருகே நில உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கேட்டபோது நில உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :8 அக்டோபர் 2012, 11:08 am

செல்வ முத்துகுமாரசாமி

நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கேட்டபோது நில உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது...

காரைக்கால் பிரெஞ்சு ஆசிரியர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி கனகலட்சுமி. இவருக்கு சொந்தமான இடம் கீழகாசாக்குடி பகுதியில் உள்ளது. நிலத்தின் முன்பகுதியை வாடகைக்கு எடுத்து மூர்த்தி (31) என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் உணவகம் நடத்தி வந்துள்ளார். நீண்ட காலமாக அவர் உரிமையாளருக்கு கடை வாடகை தரப்படவில்லையென கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கனகலட்சுமி நீதிமன்றத்தில் மூர்த்தி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் உணவகத்தின் பின்புறமுள்ள குறிப்பிட்ட பகுதியை மூர்த்தி ஆக்கிரமித்து பயன்படுத்து வந்தாராம். இதுகுறித்து மூர்த்தியிடம் கனகலட்சுமி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தவாறு பேசினாராம். கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் கனகலட்சுமி புகார் செய்துள்ளார்.

புகாரை பதிவு செய்த போலீஸார் மூர்த்தியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெங்கடசாமி உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பு செய்து விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியை போலீஸ் துணையுடன் அகற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.