மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கர்நாடக எதிர்க்கட்சி தலைவருக்கு தமிழக பாஜக விவசாய அணி கண்டனம்

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதிகமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக எதிர்கட்சி தலைவர் சித்தாராமைய்யா தெரிவித்ததற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2012, 11:37 am

ஜி.சுந்தரராஜன்

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதிகமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக எதிர்கட்சி தலைவர் சித்தாராமைய்யா தெரிவித்ததற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி விவசாய அணித் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள விபரம்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக அரசு எதிர்கட்சி தலைவர் சித்தாராமைய்யா தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டும் அதிகமாக உள்ளதாகவும், அதை உபயோகப்படுத்தாமல், காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழகம் அடம்பிடிப்பதாக தெரிவித்துள்ளார். இதுபோன்று உண்மைக்கு புறம்பான விஷயங்களை சொல்லி ஏற்கனவே கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்ரும் நிலந்து போய் உள்ள உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது அவரது பேச்சு.

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் பொறுத்தவரையில் 385 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 138 பகுதிகள் ஏற்கனவே 100 சதவீதம் தாண்டி நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. 37 பகுதிகளில் 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. 105 பகுதிகளில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது. 97 பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு என கருதப்பட்டு 70 சதவீத நீர் எடுக்கப்பட்டுள்ளது. 8 பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புநீராக உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவில் ஏராளமான குளங்களும், ஏரிகளும், ஆறுகளும், சிறு பாசன வாய்க்கால்களும் உள்ளன. வாய்க்கால்களில் நீர் வந்தால்தான் நிலத்தடி நீர் மட்டும் உயரும். ஏற்கனவே நீரின்றி தவிக்கும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கர்நாடகஅரசு எதிர்க்கட்சி தலைவரின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது.

மழையையும், காவிரிநீரையும் நம்பி தமிழகத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் விதைக்கப்பட்ட நேரடி நெல், மேல்மழை இல்லாததாலும், காவிரி நீர் பெறப்படாததாலும் கருகிப்போகும் நிலையில் உள்ளன. இந்த ஆண்டு மொத்த விவசாயத்தையும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர். இவையல்லாமல் தமிழகத்தில் 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரையிலான அறிவிக்கப்படாத மின்வெட்டினால் நடவு செய்யப்பட்ட சமுதாய நாற்றங்கால்களும் காய்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை என கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.