மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திண்டிவனம் பிரம்மதேசம் கொலை வழக்கு: குற்றவாளிகள் மூவர் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரண்

திண்டிவணம் பிரம்மதேசம் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் 3 பேர் சிதம்பரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

News image
Updated On :15 அக்டோபர் 2012, 1:06 pm

ஜி.சுந்தரராஜன்

திண்டிவணம் பிரம்மதேசம் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் 3 பேர் சிதம்பரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

திண்டிவனம் பிரம்மதேசம் அருகே நல்லாணம் கூட்டுரோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ராஜா (29) என்பவர் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பெருமுக்கன் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25), வாசு (25), பாலா (24) ஆகிய மூவரும் திங்கள்கிழமை சிதம்பரம் நம்பர்-2 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் நீதிபதி ஜெய்சங்கர் முன்னிலையில் சரணடைந்தனர். நீதிபதி மூவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.