சிதம்பரம் நகரில் பொதுஇடத்தில் அனுமதியின்றி மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து டிஜிட்டல் பேனர் வைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் நகரில் மேலவீதி கஞ்சித்தொட்டி மற்றும் காந்திசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஊர்தி பயணம் நடத்துவது குறித்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் மெழுவர்த்தி வெளிச்சத்தில் கோப்புகளில் கையெழுத்திடுவது போன்ற படம் இடம் பெற்றிருந்தது. இதற்கு அதிமுகவினர் எதி்ர்ப்பு தெரிவித்தனர்.
இதனை அறிந்த நகர போலீஸார் திங்கள்கிழமை இரவு அந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றினர். மேலும் பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), ராமமூர்த்தி (விக்கிரவாண்டி), மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், மூசா, மாவட்டச் செயலாளர்கள் ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் ஆகிய 8 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு எதிரொலி: சீனாவில் எரிபொருள் விலை அதிரடியாக உயர்வு!

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
ஈரானை விட்டுவைத்தால் இஸ்ரேல் அழிக்கப்பட்டிருக்கும்: முன்னெச்சரிக்கையாகத் தாக்குதல்! - டிரம்ப்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 5 இடங்கள்!
வீடியோக்கள்

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

