மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிதம்பரத்தில் எம்.எல்.ஏ. தலைமையில் மார்க். கம்யூ பிரசார ஊர்தி பயணம்

சிதம்பரத்தில் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசார ஊர்திப் பயணம் தொடர்ந்து நடைபெற்றது.

News image
Updated On :16 அக்டோபர் 2012, 1:49 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசார ஊர்திப் பயணம் தொடர்ந்து நடைபெற்றது.

அக்.15 நேற்று முதல் அக்.18 வரை நான்கு நாட்கள் இந்த பிரசார ஊர்திப் பயணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் நடத்தப்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், காவிரி நீர் இன்றி 16 லட்சம் ஏக்கர் பரப்பிலான விளைச்சல் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதையும் 16 மணி நேரம் மின் வெட்டு சென்னையைத் தவிர மற்ற இடங்களில் அமலில் உள்ள நிலையில், சென்னைக்கு மட்டும் 1 மணி நேரம் மின்வெட்டு அளிக்கப்படுவதைக் கண்டித்தும் இந்த பிரசார ஊர்திப் பயணத்தில் வலியுறுத்தப்படுவதாக பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், மின்வெட்டு பிரச்னையைக் கையாள அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தீர்வு காண முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.