47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மத்தியத் தொகுப்பில் இருந்து மின்சாரம் தர அரசு ஆவன செய்ய வேண்டும்: ராமகிருஷ்ணன்

கடும் மின் பற்றாக்குறையால் தவித்து வரும் தமிழகத்துக்கு, மத்தியத் தொகுப்பில் இருந்து மின்சாரம் அளிக்க, மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கூறினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்.

News image
Updated On :16 அக்டோபர் 2012, 9:21 am

சங்கர்

கடும் மின் பற்றாக்குறையால் தவித்து வரும் தமிழகத்துக்கு, மத்தியத் தொகுப்பில் இருந்து மின்சாரம் அளிக்க, மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கூறினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்.

இன்று நாகப்பட்டினம் வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய முறையில் பிரச்னையை அணுக வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு காரணமாக பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, திருப்பூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடை நிறுவனங்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க உடனடியாக தடையில்லா மின்சாரம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு முன் வர வேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.