இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

தமிழகம் முழுவதும் 50 டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையின் நிர்வாக வசதிக்காகவும், காவல்துறையின் பணியை செம்மைப்படுத்தவும் அவ்வபோது அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.  தமிழக காவல்துறையில் ஒன்றரை

Updated On :1 மார்ச் 2013, 7:50 pm IST

தமிழகம் முழுவதும் 50 டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. கே.ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையின் நிர்வாக வசதிக்காகவும், காவல்துறையின் பணியை செம்மைப்படுத்தவும் அவ்வபோது அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.  தமிழக காவல்துறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டி.எஸ்.பி.கள் மொத்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இதன் பின்னர் மொத்தமாக டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்யப்படப்படாமல் இருந்தனர்.  சில டி.எஸ்.பி.கள் அவர்கள் விருப்பத்தின் பேரிலும், பணி ஒழுங்கீனத்தின் காரணமாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.  இந்நிலையில் மாநிலம் முழுவதும் 50 டி.எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. கே.ராமானுஜம் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

சென்னை தவிர மீதி அனைத்துப் பகுதிகளிலும் இந்த டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த டி.எஸ்.பி.கள் ஒரே பதவியில் பல ஆண்டுகளாக பணி புரிந்தவர்களாக இருப்பதாலும், விருப்பத்தின் அடிப்படையிலும், புகார் அடிப்படையிலும் மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.கள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.