வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பிரதமர் குறித்து விமர்சனம்: நரேந்திரமோடிக்கு முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் நோட்டீஸ்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கே.கே.பென்சன், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங்கை

Updated On :11 மார்ச் 2013, 6:48 pm IST

பிரதமர் மன்மோகன்சிங் குறித்த விமர்சனங்களை திரும்பபெற வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கே.கே.பென்சன், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங்கை சோனியாகாந்தி குடும்பத்தின் இரவுகாவலர் என்று நரேந்திரமோடி விமர்சித்துள்ளதை கடுமையாக ஆட்சேபித்துள்ள பென்சன், நோட்டீஸ் கிடைத்த 3 நாள்களுக்குள் இந்த விமர்சனத்தை திரும்பபெற வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். இதை செய்ய தவறும்பட்சத்தில் பெங்களூர் தலைமை மாநகர மேஜெஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தனியார் புகார் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை பொது இடத்தில் நரேந்திரமோடி அவமானப்படுத்தி, தரம்தாழ்த்தி, களங்கப்படுத்திவிட்டதாக பென்சன், நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.