ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஆயுதங்களால் தலையில் தாக்கி கிறிஸ்துவ பாதிரியார் கொலை

பெங்களூர் யஸ்வந்தபுரம் பழைய மைசூர் லேம்ப் சாலையில் உள்ளது புனித செயின்ட் பீட்டர்ஸ் கத்தோலிக்க கிறிஸ்துவ குருமடம். இந்த குரு மடத்தில் பாதிரியார் ஆவதற்கான

Updated On :1 ஏப்ரல் 2013, 12:01 pm

பெங்களூர் யஸ்வந்தபுரம் காவல் சரகத்தில் ஆயுதங்களால் தலையில் தாக்கி கிறிஸ்துவ பாதிரியார் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் யஸ்வந்தபுரம் பழைய மைசூர் லேம்ப் சாலையில் உள்ளது புனித செயின்ட் பீட்டர்ஸ் கத்தோலிக்க கிறிஸ்துவ குருமடம். இந்த குரு மடத்தில் பாதிரியார் ஆவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில் முதல்வராக இருந்தவர் தமிழ்நாடு ஊட்டியைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் (60). நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு குருமடத்தில் தங்கியிருந்த அவரை மர்மநபர்கள் தலையில் ஆயுதங்களாள் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த யஸ்வந்தபுரம் போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை மாநகர காவல்துறை ஆணையர் ஜோதிபிரகாஷ்மிர்ஜி, துணை ஆணையர் சித்தராமையா, பெங்களூர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ் ஆகியோர் பார்வையிட்டனர். பாதிரியார் மறைவுக்கு கர்நாடக தமிழ் கத்தோலிக்க பொதுநல சங்கத்தின் தலைவர் புஷ்பராஜ், கர்நாடக கன்னட கத்தோலிக்க சங்கத்தின் தலைவர் ரெபெல்ராஜ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.