கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக மியான்மர் நாட்டில் தனியாருக்கு சொந்தமான பத்திரிகைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ராணுவ ஆட்சியின் கீழ் அரசுக்கு சொந்தமான பத்திரிகைகளே வெளியிடப்பட்டன. தனியாருக்கு சொந்தமான பத்திரிகைகள் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. தற்போது அரசின் புதிய கொள்கையின்படி தனியார் பத்திரிகைகள் வெளியிட அனுமதி தரப்பட்டுள்ளது.
பர்மிய மொழியில் உள்ள வாரப்பத்திரிகைகளான தி வாய்ஸ், தி கோல்டன் பிரஷ் லேண்ட், தி யூனியன், தி ஸ்டாண்டர்ட் டைம் உள்ளிட்டவை நாளிதழ்களாக மாற்றப்பட்டுள்ளன. தி வாய்ஸ் நாளிதழின் ஆசிரியர் ஆங் சோ கூறுகையில்: அதிகாலையிலேயே வாய்ஸ் பத்திரிகை விற்பனை மும்முரமாக இருந்தது. தனியார் நாளிதழ்களை படிக்க பொதுமக்கள் எவ்வளவு ஆர்வமுடன் உள்ளனர் என்பதையே இது காண்பிக்கிறது.ராணுவ ஆட்சியாளர்கள் கடந்த 1964-ல் பத்திரிகைகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்நிலையில் புதிய அரசு கடந்த 2011-ல் பதவியேற்றவுடன் பத்திரிகைகள் மீதான தனது கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
ராணுவ ஆட்சியின்போது ஜனநாயக இயக்கம் மற்றும் அதன் தலைவர் ஆங் சான் சூ கியின் பெயரை பயன்படுத்தினாலே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என மூத்த பத்திரிகையாளர் தின்ஹா சா தெரிவித்தார். புதிய விதிமுறைகளின்படி 16 வார இதழ்கள் நாளிதழ்களாக மாற அனுமதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: பூக்கடை, பாா்க் டவுன், பல்லாவரம், அம்பத்தூர்!

டீசல் விலை உயா்வால் ஈரோடு மாவட்டத்தில் இன்றுமுதல் லாரி வாடகை 25 சதவீதம் உயா்வு!உரிமையாளா்கள் அறிவிப்பு
உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைக் கொண்ட நாடு இந்தியா! பிரதமா் மோடி பெருமிதம்!!

பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு: போக்குவரத்து ஒழுக்கம் குறித்து காவல் துறை அறிவுரை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


