பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவருக்குமான அதிகாரத்தை தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்ற கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ள போதிலும், இந்தப் பிரச்னைக்கு முடிவுக் கட்ட வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் திங் விஜய சிங் கூறியுள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
நாட்டு மக்கள் என்ன சொன்னாலும், 100 நாள் வேலை திட்டம், தகவல் பெறும் உரிமை உள்ளிட்ட சில விவகாரங்களைத் தவிர அரசு நிர்வாகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலையிடுவதில்லை. ஆனால், அவர் நிர்வாகத்தில் தலையிடுவது போன்ற கருத்து நிலவுகிறது. இது நல்லதல்ல. எனவே, மக்கள் மத்தியில் உள்ள இந்த எண்ணத்தைப் போக்க வேண்டும்.இரண்டு அதிகார மையம் இருப்பது போன்ற தோற்றம் அரசியலில் நிச்சயமற்ற தன்மையைத் தோற்றுவிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு முடிவுக் கட்ட வேண்டும். இந்த அர்த்தத்தில்தான், "இரட்டை அதிகார மையம் கூடாது' என ஏற்கெனவே நான் கருத்து தெரிவித்திருந்தேன் என்றார்.
இரண்டு அதிகார மையங்களைக் கொண்ட அரசாலி சிறப்பான நிர்வாகத்தைக் கொடுக்க முடியவில்லே. எனவே, அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் வேறு ஒரு நபரை பிரதமராக நியமிக்கக் கூடாது என திக் விஜய சிங் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையிலான உறவு சிறப்பாக உள்ளது. இதுபோன்ற உறவை வேறு எங்கும் காண முடியாது. எந்த ஒரு ஜனநாயகத்துக்கும் இந்த இரட்டை அதிகார முறைதான் சிறந்தது. எதிர்காலத்திலும் பின்பற்றலாம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் துவிவேதி கூறியிருந்தார். அடுத்த பிரதமராக யாரை நியமிக்கலாம் என்ற கேள்விக்கு திக் விஜய சிங் பதில் அளிக்க மறுத்து விட்டார். இதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என்றார்.
பிரதமரை விட சோனியா காந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் பிரதமர் அலுவலகத்துக்கான மதிப்பு குறைந்திருப்பது குறித்து கேட்டபோது, கட்சியைப் பொறுத்தவரை சோனியா காந்திக்குதான் முதலிடம். அதில் சந்தேகத்துக்கு இடம் இல்லை என்றார். பிரதமர் மன்மோகன் சிங் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் இருப்பது குறித்து கேட்டபோது, அதை திக் விஜய சிங் மறுத்தார். அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல விஷயங்களில் பிரதமர் தான் முடிவு எடுக்கிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

