இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு திங்கள்கிழமை (ஏப்.22) மீண்டும் தொடங்குகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2013, 6:18 pm

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது.

19 உறுப்பினர்கள் கொண்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சி, 18 உறுப்பினர்கள் கொண்ட திமுக ஆகிய கட்சிகளின் ஆதரவை இழந்துள்ள காங்கிரஸýக்கு இந்த கூட்டத் தொடர் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதனை உணர்ந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மூத்த மத்திய அமைச்சர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

22 எம்.பி.க்கள் உள்ள சமாஜவாதி கட்சி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தரவில்லை என்றாலும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி உதவிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சிக்கு மக்களவையில் 21 உறுப்பினர்கள் உள்ளனர்.

மத்திய பட்ஜெட், லோக்பால் மசோதா, உணவுப் பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா, நீதித் துறை சீர்திருத்த மசோதா, வருங்கால வைப்புநிதி ஒழுங்காற்று ஆணைய மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.