சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

முகேஷ் அம்பானிக்கு சமீபத்தில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் கடிதங்கள் வந்ததாக அவரது மும்பை அலுவலகம், போலீஸாரிடம் புகார் செய்தது. இதைத் தொடர்ந்து, தெற்கு மும்பையில் உள்ள அவரது பங்களா வீட்டுக்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.இந்நிலையில்

Updated On :21 ஏப்ரல் 2013, 6:51 pm IST

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

முகேஷ் அம்பானிக்கு சமீபத்தில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் கடிதங்கள் வந்ததாக அவரது மும்பை அலுவலகம், போலீஸாரிடம் புகார் செய்தது. இதைத் தொடர்ந்து, தெற்கு மும்பையில் உள்ள அவரது பங்களா வீட்டுக்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.இந்நிலையில், முகேஷ் அம்பானிக்கு பயங்கரவாத அமைப்புகளால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசின் பாதுகாப்பு அமைப்புகள் ஆய்வு செய்தன. அவை, அவருக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய வீரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தன.

இதைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி, அவருக்கு நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.அரசு சாராத தனிநபர் ஒருவருக்கு ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.