திருவள்ளூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூரை அடுத்த மாதவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவாஸ்கர். இவரது மனைவி சுமதி (31). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணமானது.திருமணத்தின் போது பெண் வீட்டாரிடமிருந்து 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கணவர் கவாஸ்கர், அவரது தந்தை குமார், தாயார் காந்தா மற்றும் உறவினர் இளந்திரையன் ஆகியோர் சுமதியிடம் மேலும் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினராம்.
இது குறித்து சுமதி, ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் பேரில், மகளிர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகியுள்ள கணவர், மாமனார் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









