காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி இறுதித் தீர்ப்பை செயல்படுத்த அதிகாரமுள்ள தற்சார்பான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடாமல் மேற்பார்வைக் குழு அமைக்குமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் இது குறித்து நடந்த வழக்கில் கர்நாடகத் தரப்பை மன நிறைவடையச் செய்யவே உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை பயன்படும்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு அதில் கூறியிருக்கிற காவிரி நீர் பங்கீட்டை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டு மென ஆணையிட்டது. இதை இந்திய அரசு செயல்படுத்த வேண்டும். என உச்ச நீதிமன்றமும் ஆணையிடுவதுதான் சட்ட நெறிக்கு இசைவானதாக அமையும். ஆனால் இதற்கு மாறாக காவிரி மேற்பார்வைக் குழு என்ற தற்காலிக ஏற்பாட்டை உச்ச நீதிமன்றம் வரையறுத்திருப்பது சட்டநெறிக்கு எதிரானது.
காவிரித் தீர்ப்பாயம் பக்ரா - பி.ஆர் மேலாண்மை வாரியத்தை மும்மாதிரியாகக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் நிறுவவேண்டும் என கூறியிருப்பதோடு, அவ்வாரியத்தின் அமைப்பு வடிவம், செயல்பாட்டு முறை ஆகியவற்றை தெளிவாக வரையறுத்து இருக்கிறது. இதற்கு மேல் இது குறித்து சட்ட அமைச்சகத்திடம் கருத்துக் கேட்டிருப்பதாக இந்திய நீர்வளத் துறை உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோருவது கர்நாடகத்திற்கு சார்பாக காலம் கடத்தும் உத்தியே ஆகும். இந்த காலம் கடத்தும் உத்திக்கு உச்ச நீதிமன்றமும் துணைபோகிறது.
காவிரி இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்துவதாக சொல்லி, செயலுக்கு உதவாத காவிரி ஆணையத்தை இந்திய அரசு 1998 இல் அமைத்தது. தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு மாறாக காலம் கடத்துவதற்கே காவிரி ஆணையம் பயன்பட்டிருக்கிறது என்பதை காவிரி தீர்ப்பாயமே சுட்டிக்காட்டி தனது இறுதித் தீர்ப்புரையில் கண்டித்திருக்கிறது. இந்த பட்டறிவின் அடிப்படையில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடுவதாக தீர்ப்பாயம் தெளிவுப்படுத்தியிருக்கிறது.
இச்சுழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கால வரம்பு கூட விதிக்காமல் காவிரி மேற்பார்வை குழு அமைக்கச் சொல்லி வழக்கை முடித்திருப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நடுவு நிலையை கேள்விக்கு உள்ளாக்குகிறது.
இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு புதிய புதிய குடி நீர் திட்டங்களையும் பாசன விரிவாக்கத் திட்டங்களையும் ஏற்படுத்தி காவிரி நீர் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முற்றிலும் முடக்கிப் போடுவதற்கு கர்நாடகம் விரைந்து செயல்படும். இடைக்காலத் தீர்ப்புக்குப் பிறகு ஏற்பட்ட நிகழ்வுகளே இதற்குச் சான்று.
உச்சநீதிமன்றத்தின் இப்போதைய ஆணை கர்நாடகத்தின் தமிழினப் பகை நடவடிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமைகிறது.
எனவே தமிழக அரசு இந்திய அரசுக்கு அழுத்தும் கொடுத்து உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் செயலலிதா உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி இதற்கு ஏற்ற தீர்மானத்தை இயற்றி அனைத்துக் கட்சி குழுவுடன் இந்தியப் பிரதமரைக் கண்டித்து உடனடியாக வலியுறுத்த வேண்டும். இந்திய அரசு இனியும் காலம் கடத்தாமல் காவிரி மேலாண்மை வாரியம் நிறுவி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை குழப்பமின்றி செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏப்.19-ல் தனுஷின் கர படத்தின் முன் வெளியீட்டு விழா!

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மீண்டும் ஹேசில்வுட்!

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |

தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

