விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

இன்று முதல் சிலிண்டர்களுக்கு நேரடி மானிய முறை துவக்கம்

எல்பிஜி சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் அளிக்கும் திட்டம் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் இன்று துவக்கப்படுகிறது.

News image
Updated On :1 ஜூன் 2013, 1:12 pm IST

எல்பிஜி சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் அளிக்கும் திட்டம் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் இன்று துவக்கப்படுகிறது.

எல்பிஜி சிலிண்டர்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகையான ரூ.435ஐ, நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட இருந்தது. ஆனால், கர்நாடகாவின் மைசூர், இமாச்சலின் மண்டி மாவட்டங்களில் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு, 18 மாவட்டங்களில் மட்டும்  செயல்படுத்தப்பட உள்ளது.

இனிமேல், புதுச்சேரி, வடக்கு கோவா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் உள்ள எல்பிஜி நுகர்வோர், ஒவ்வொரு முறை சிலிண்டருக்கு பதிவு செய்யும் போதும், அவர்களது வங்கிக் கணக்கில், மத்திய அரசின் மானியத் தொகையான ரூ.435 வரவு வைக்கப்படும். இதனுடன், நுகர்வோர் அளிக்க வேண்டிய ரூ.410ஐயும் சேர்த்து ரூ.845 ரூபாய் கொடுத்து வீட்டுக்கு வரும் சிலிண்டரை நுகர்வோர் வாங்க வேண்டும்.

இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து, நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.