/

ஐஐடியில் சாதித்த மாணவி, சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி?

ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள லிவ்லீன் கௌர் என்ற மாணவி, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2013, 10:00 am

ஐஐடி நுழைவுத்  தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள லிவ்லீன் கௌர் என்ற மாணவி, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில்  தோல்வி அடைந்துள்ளார்.

அதுவும் சாதாரண தோல்வி அல்ல.. இயற்பியல், கணிதம், உயிரியல் என மூன்று தாள்களிலும் அவள் தோல்வி அடைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான சிபிஎஸ்இ தேர்வு முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து செய்முறைத் தேர்வுகளிலும், சிறப்பாக செய்து 30க்கு 30 மதிப்பெண் பெற்றுள்ள லிவ்லீன், எழுத்துத் தேர்வில், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் முறையே 2, 14, 7 மதிப்பெண்ளை மட்டுமே பெற்றுள்ளதாக தேர்வு முடிவில் உள்ளது. அதிலும், கணிதத்தில் 100க்கு 7 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த லிவ்லீன் மனுவை விசாரித்த நீதிபதி, உடனடியாக லிவ்லீன் விடைத்தாள்களை சரிபார்த்து, மதிப்பெண்களை மறு கூட்டல் செய்து ஜூன் 5ம் தேதிக்குள் நீதிமன்றதில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

லிவ்லீன் ஜுன் 7ம் தேதி ஐஐடியில் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க அழைப்புக் கடிதம் பெற்றுள்ளதால், அவரது மனு அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.