விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பீகார் அரசு பொறியாளர் வீட்டில் வெள்ளி குக்கர் : காவலர்கள் ஆச்சரியம்

பீகார் அரசு அதிகாரி ஒருவர், வெள்ளியில் தயாரிக்கப்பட்ட குக்கரில் சமையல் செய்து சாப்பிட்டு வந்தது, சோதனையில் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2013, 12:38 pm IST

பீகார் அரசு அதிகாரி ஒருவர், வெள்ளியில் தயாரிக்கப்பட்ட குக்கரில் சமையல் செய்து சாப்பிட்டு வந்தது, சோதனையில் தெரிய வந்துள்ளது.

பீகார் காவல்துறையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர், அரசு பொறியாளர் ஒருவரின் வீட்டில்  சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் வெள்ளியில் செய்யப்பட்ட பிரஷர் குக்கரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இது பற்றி கூறிய காவல்துறை அதிகாரி, அவரது வீட்டில் சோதனைக்குச் சென்ற போது, வெள்ளி குக்கரைப் பார்த்து நாங்கள் அனைவருமே ஆச்சரியப்பட்டோம். அதுவும் ஒரு சாட்சியாக பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

பீகாரில் கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கும் துறையில் பணியாற்று வரும் ஒரு சாதாரண பொறியாளர் தான் அவதேஷ் குமார் மண்டல். ஆனால், அவர் ஒரு ராஜாவைப் போல வாழ்க்கை நடத்தி வருகிறார். வெறும் இந்த சில்வர் குக்கரை வைத்து இதனைக் கூறவில்லை. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். அதில் ஒன்றரைக் கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி, 15 வைர ஆபரணங்களும் அடங்கும் என்கிறார் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.