விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் : அன்புமணி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை  உடனே திரும்ப பெற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2013, 12:05 pm IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வை  உடனே திரும்ப பெற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 பைசாக்களும், டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசாக்களும்  உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உள்ளூர் வரிகளையும் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 95 பைசா உயர்ந்து ரூ. 66.85 ஆகவும், டீசல் விலை 61 பைசா உயர்ந்து ரூ. 53.53 ஆகவும் உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போது தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும். ஆனால், உலக சந்தையில் கடந்த 3 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது  மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை இல்லாத புதிய வழக்கமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நாள் தோறும் மாறக்கூடியது. எனவே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்திற்கான காரணியாக ரூபாய் மதிப்பைக் கருதக் கூடாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றும் செயலாகும். எனவே, ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.