பீகார் முதல்வராக இருந்த போது, மாட்டுத் தீவனத்தில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வேறு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி லாலு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
1997ஆம் ஆண்டு ரூ.30 கோடி அளவுக்கு நடைபெற்ற ஊழல் வழக்கில் லாலு உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முடிந்து வரும் 15ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









