முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காதல் விவகாரத்தில் கிராம நிர்வாக அதிகாரியின் மகள் கடத்தல்

இந்த நிலையில் அர்ச்சனாவும் சபரியும் காதலித்து வந்துள்ளனர்.இருவரும் திருமணம் செய்துகொள்வதாக இருந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால்

Updated On :1 ஜூலை 2013, 3:07 pm IST

பொள்ளாச்சி அருகே உள்ளது நஞ்சேகவுண்டன்புதூர். இங்கு வசித்து வருபவர் வேலுசாமி. கிராம நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவரது மகள் அர்ச்சனா (21). கோவை மெயின் ரோட்டில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதே கடையில் நெகமம் சேரிபாளையத்தை சேர்ந்த சபரி (22) என்பவரும் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அர்ச்சனாவும் சபரியும் காதலித்து வந்துள்ளனர்.இருவரும் திருமணம் செய்துகொள்வதாக இருந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அர்ச்சனா தன்னை தொந்தரவு செய்யவேண்டாம் என்று சபரியிடம் கூறினார்.இதனால் கவலையடைந்த சபரி பலமுறை அர்ச்சனாவை தொடர்புகொண்டு சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அர்ச்சனா பிடிவாதமாக மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த சபரி தனது காதல் நிலவரத்தை தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் கூறியுள்ளார். சபரியின் நிலையை கண்டு அவர்களும் உதவ முன்வந்தனர்.கடந்த 2 நாட்களுக்கு முன் அர்ச்சனா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த சபரி, தனது தாய் ரங்கநாயகி (55), அக்காள் மஞ்சுளா (27), மஞ்சுளாவின் கணவர் ஜெயராமன் (32) மற்றும் நண்பர்கள் மதன் (21), பூபதி (40), மனோஜ் (22), சக்திவேல் (23) ஆகியோர் வேனில் நஞ்சேகவுண்டன் புதூருக்கு சென்று அர்ச்சனாவை கடத்திச் சென்றனர்.

இது குறித்து அர்ச்சனாவின் தந்தையும், கிராம நிர்வாக அதிகாரியுமான வேலுசாமி வடக்கிபாளையம் போலீசில் புகார் செய்தார்.புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீஸார் அர்ச்சனாவையும், கடத்தல் கும்பலையும் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.