முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவர் கைது

இந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த புகாரின்பேரில் மத்திய குற்றபிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவகுமார் ஆகியோர்

Updated On :1 ஜூலை 2013, 3:47 pm IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஆர்.ஓ) விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் சேது நாராயணன். தற்போது இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் ரூ.1 1/2 கோடி மதிப்பிலான 3750 சதுர அடி நிலம் உள்ளது.

இந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த புகாரின்பேரில் மத்திய குற்றபிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவகுமார் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் ஆல்ட்ரின் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது விஞ்ஞானி சேது நாராயணனுக்கு சொந்தமான நிலத்தை மரக்காணத்தை சேர்ந்த வேலாயுதம் என்பவர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்தது தெரியவந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.போலீஸார் இது குறித்து மேலும்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.