சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல்: பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி

ஜப்பான் நாடாளுமன்ற மேலவையில் 242 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் மொத்தமுள்ள இடங்களில் பாதி இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது.

Updated On :21 ஜூலை 2013, 7:11 pm IST

ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஜப்பான் நாடாளுமன்ற மேலவையில் 242 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் மொத்தமுள்ள இடங்களில் பாதி இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி மேலவைக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலின் சில சுற்று நிலவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், பிரதமர் ஷின்சோ அபே அதிக வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் அவரது சுதந்திர ஜனநாயகக் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.

தேர்தல் நடைபெற்ற 121 இடங்களில் அக்கட்சிக்கு 71 முதல் 80 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிய வருகிறது. இது ஆளுங்கட்சிக்கு மேலவையில் பலத்தைக் கொடுத்துள்ளது. ஏற்கெனவே கீழவையில் பெரும்பான்மை கொண்டுள்ள அக்கட்சிக்கு இது புதுத் தெம்பையும், அரசுக்கு ஸ்திரத்தன்மையையும் அளித்துள்ளது. இதனால், ஷின்சோ அபேவுக்கு முன் பிரதமராக குறுகிய காலமே இருந்த 6 பேருக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் சட்டங்களை இயற்றுவதில் இருந்த தடை அவருக்கு இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.