முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் லட்சம் பேர் இன்று (ஜூலை 21) எழுதினர்.இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 7,914 பேர் வரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுக்கு 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.சென்னையில் 12 ஆயிரத்து 908 பேர் இந்தத் தேர்வை எழுதினர். 1,019 பேர் தேர்வுக்கு வரவில்லை.தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பிரச்னைகள் எதுவுமின்றி தேர்வு அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ், வணிகவியல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்கள் எளிமையாக இருந்ததாகவும், வரலாறு உள்ளிட்ட சில பாடங்கள் சற்றுக் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளின் தண்டனையை உறுதிப்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

ஆசிரியா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு: முதல் நாளில் 9,132 போ் விண்ணப்பம்

யமுனையின் 32 முக்கிய படித்துறைகளை புதுப்பிக்க டிடிஏ அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு






