அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

4வது ஒரு நாள் : இந்தியாவுக்கு 145 ரன்கள் இலக்கு

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 3:44 pm IST

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

பூவா தலையா வென்ற இந்தியா, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணி வீரர்கள் களமிறங்கினர். அடுத்தடுத்து சொற்ப ரன்களிலேயே ஜிம்பாப்வே அணி வீரர்கள் ஆட்டமிழக்க, 42.4வது ஓவரில் ஜிம்பாப்வே 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜிம்பாப்வே அணி சாரபில் சிகும்புரா மட்டுமே 66 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். துவக்க வீரர் சிபன்டா 45 பந்துகளில் 24 ரன்களை எடுத்தார்.

இந்தியா தரப்பில் மிஷ்ரா 3 விக்கெட்டுகளையும், ஷர்மா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது.

இந்த நிலையில், 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு அடுத்து களமிறங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.