சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலையில் டிடி மருத்துவ மாணவர்கள் போராட்டம்

திருவள்ளூரில் உள்ள டிடி மருத்துவக் கல்லூரியில் 2011ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள் 103 பேர் கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:01 pm IST

திருவள்ளூரில் உள்ள டிடி மருத்துவக் கல்லூரியில் 2011ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள் 103 பேர் கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டிடி மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்காததால், இவர்கள் இரண்டாமாண்டு தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலமே கேள்விக்குறியான மாணவ, மாணவிகள், புதன்கிழமை காலை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் அவர்கள் தொடர்ந்து அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.