ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

மெட்ராஸ் கஃபே படத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:36 am

மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்து நடித்தும இருக்கும் திரைப்படம் மெட்ராஸ் கஃபே. இந்த திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக தமிழ் இயக்கங்கள் கூறி வருகின்றன. மேலும் இந்த திரைப்படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என தமிழ் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

 இதன் ஒரு பகுதியாக தமிழ் ஈழ மாணவர் கூட்டமைப்பினர் மயிலாப்பூர் லஸ் பகுதியில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதைப் பார்த்த போலீஸார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்தனர்.

 முன்னதாக இந்தப் போராட்டத்துக்கு சிபி லட்சுமணன் தலைமை வகித்தார். இப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.