தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

வழக்குரைஞர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினார் முதல்வர்

சென்னை தலைமைச் செயலகத்தில், மறைந்த 66 வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு நிதியுதவி வழங்கும் அடையாளமாக 7 பேருக்கு தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

Updated On :11 செப்டம்பர் 2013, 9:46 am

சென்னை தலைமைச் செயலகத்தில், மறைந்த 66 வழக்குரைஞர்களின்  வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு நிதியுதவி வழங்கும் அடையாளமாக 7 பேருக்கு தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நலநிதியத்தின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தால் அவரது சட்டபூர்வ வாரிசுதாரருக்கு அல்லது நியமனதாரருக்கு வழக்கறிஞர்கள்  நல நிதியத்திலிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2012ம் ஆண்டு முதல் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியத்தின் உறுப்பினராக உள்ள வழக்குரைஞர்களின் மறைவின் போது, அவர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 2 லட்சம் ரூபாயிலிருந்து  5 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இந்த உதவித் தொகையை இடையூறு இல்லாமல் தொடர்ந்து வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நலநிதியத்திற்கு ஆண்டு தோறும் 4 கோடி ரூபாய் தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியச் சட்டத்தின் கீழ் உறுப்பினராக பதிவு செய்த வழக்குரைஞர்களுக்கு அவர்களின் பதிவு காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஒரே சீராக எந்தவித வகைப்பாடும் இல்லாமல் மறைந்த வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

 அதன்படி, மறைந்த 66 வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 3 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்களில் 7 வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு நிதியுதவியாக தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் இன்று வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.