வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஐநா சபை கூட்டம்: வங்கதேச பிரதமர் ஹசினா புறக்கணிப்பு

நியூயார்க்கில் நடைபெறும் ஐநா சபை கூட்டத்தை புறக்கணிக்க  வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா  முடிவு செய்துள்ளார்.வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் நெருக்கடி மற்றும் அமெரிக்க அதிபர்

Updated On :11 செப்டம்பர் 2013, 5:00 pm IST

நியூயார்க்கில் நடைபெறும் ஐநா சபை கூட்டத்தை புறக்கணிக்க  வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா  முடிவு செய்துள்ளார்.வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் நெருக்கடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யத்  தவறியமை உள்ளிட்ட காரணங்களால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஆளும் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, தேர்தல் காரணமாக வங்க தேசத்தில் நிலவி வரும் அரசியல் நிச்சயமற்றத் தன்மை காரணமாகவும்,அடுத்த நாடாளுமன்ற கூட்டம் இன்று தொடங்க இருப்பதாலும் ஹசினா ஐநா சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யாத காரணத்தால்தான்  ஹசினா ஐநா சபை கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாக வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்தன.68-வது ஐநா சபை கூட்டத்திற்கு ஹசினா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.