ஸ்டவ் வெடித்த பெண் சாவு: சாவில் சந்தேகம் என தந்தை போலீஸில் புகார்
சிதம்பரத்தை அடுத்த குமுடிமூலை கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா (22). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் திருமணமாகி 4 வருடங்களாகிறது. 2


சிதம்பரம் அருகே ஸ்டவ் வெடித்து திருமணமான இளம்பெண் ஒருவர் இறந்தார். தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை மருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரத்தை அடுத்த குமுடிமூலை கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா (22). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் திருமணமாகி 4 வருடங்களாகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் 28-ம் தேதி வீட்டில் பால் காய்ச்சும் போது ஸ்டவ் வெடித்ததில் படுகாயம் அடைந்து ஷோபனா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து பெண்ணின் தந்தை தனசேகர் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக மருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மருதூர் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வரதட்சிணை கொடுமையா என சிதம்பரம் உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...