சிதம்பரம் அண்ணாமலைநகரில் மெக்கானிக் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள இருசக்கர வாகன ஒர்க்க்ஷாப்பில் செவ்வாய்க்கிழமை மெக்கானிக் சந்திரசேகரன் (39) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். கொலையுண்ட சந்திரசேகரன் மனைவி பெயர் மீனாட்சி பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றுகிறார். மனைவிக்கும், இவருக்கும் ஏற்பட்ட தகராறில் சந்திரசேகரன் தனியாக வசித்து வருகிறார். சமீபத்தில் மனைவியை மருத்துவமனைக்கு நுழைந்து சந்திரசேகர் தாக்கியது குறித்து அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தனியாக வசித்து வந்த சந்திரசேகரன் இருசக்கர வாகன ஒர்க்க்ஷாப்பில் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
பாஜக தொகுதிகளில் பொறுப்பாளா்கள் நியமனம்

கேட்ட காமராஜர்! மறுத்த தீர்த்தகிரியார்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

