டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி காட்டுமன்னார்கோயில் அருகே பொதுமக்கள் சாலைமறியல்!
காட்டுமன்னார்கோயில் அருகே திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தில் மெயின்ரோட்டிலேயே டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. பொதுமக்களுக்கு


காட்டுமன்னார்கோயில் அருகே பழஞ்சநல்லூரில் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் கடையை திறக்கவிடாமல் தடுத்துமுற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம்-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டுமன்னார்கோயில் அருகே திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தில் மெயின்ரோட்டிலேயே டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இந்த மதுபானக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்தனர். பின்னர் வட்டாட்சியர் தில்லைகோவிந்தன் மற்றும் வருவாய்த்துறையினர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி 10 தினங்களுக்கு மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதியளித்ததை அடுத்து மறியலை பொதுமக்கள் வாபஸ் பெற்றனர். மறியல் போராட்டத்தினால் டாஸ்மாக கடை காலை 11 மணிக்கு 1 மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டது. சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...