ஆலங்குடி அருகே தொழிலாளர்கள் சாலை மறியல்
மேலாத்தூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குளம், கால்வாய், சாலை உள்ளிட்டவைகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடந்த 2


ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் கடந்த 2 மாதமாக கூலி வழங்காததைக் கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலாத்தூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குளம், கால்வாய், சாலை உள்ளிட்டவைகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடந்த 2 மாதமாக அதற்கான கூலி வழங்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு ஆலங்குடியில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு சென்று கூலியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்படி வங்கிக்கு சென்ற தொழிலாளர்களிடம் ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து வங்கி கணக்குக்கு இதுவரை பணம் வரவில்லை என்று வங்கி அலுவலர்கள் கூறினார்களாம்.
மேலும், அரசு கொடுக்கும் அளவுப்படி வேலை பார்த்தாலும் ஒவ்வொரு குழுவினருக்கும் ஒரே அளவில்தான் தொகை கொடுக்க வேண்டும். அதற்குமாறாக, அதன்படி கொடுக்காமல் அதில் ஒவ்வொருவருக்கும் தொகை வேறுபடுகிறது. அரசு கொடுக்கும் தொகை ரூ. 132- க்குப்பதிலாக குறைந்த பட்சம் ரூ. 20 வரை கொடுக்கப்படுகிறது. இதைப்பெற ஒரு நாளைக்கு ஆலங்குடி செல்ல கட்டணம் மட்டுமே ரூ. 20 செலவாகிறது. பலமுறை பணம் வாங்காமலே திரும்பி வந்துள்ளோம். மேலும், பணியை மதிப்பிட ஓவர்சீயர் வருவதில்லை. என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் சிக்கப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருவரங்குளம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகிராமன், சரவணராஜா (என்.ஆர்.சி.எஸ்) வடகாடு காவல் உதவி ஆய்வாளர்கள் கலியராஜ், கலியபெருமாள்(தனிப்பிரிவு), ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவாரத்தியில் ஈடுபட்டனர். அதில், நிலுவையில் உள்ள தொகையை உடனே வழங்கவும், பணியை முறைப்படுத்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...