2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

காட்டுமன்னார்கோயில் அருகே திடீர் தீவிபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்

காயிதேமில்லத்நகரில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை) இரவு திடீரென தீப்பிடித்து அப்துல்சுக்கூர், பஜிலாபேகம்,

News image
Updated On :5 ஏப்ரல் 2013, 12:24 pm

G.Sundararaj

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குணவாசல் கிராமத்தில் காயிதேமில்லத் நகரில்  நேற்று(வியாழக்கிழமை) இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 3 வீடுகள் எரிந்து சேதமுற்றன.

காயிதேமில்லத்நகரில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை) இரவு திடீரென தீப்பிடித்து அப்துல்சுக்கூர், பஜிலாபேகம், முகமதுஇலாஹி ஆகியோரது வீடுகள் எரிந்து சேதமுற்றன. தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமுற்றன. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை வட்டாட்சியர் தில்லைகோவிந்தன், வருவாய் ஆய்வாளர் ராமதாஸ், குணவாசல் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயராஜன் ஆகியோர் சென்று பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.