காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது
பரங்கிப்பேட்டை அரியகோஷ்டியைச் சேர்ந்த கணேசன் மகன் அப்பாசாமி (24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகள் அபிராமி (22) ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக


சிதம்பரம் அருகே 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அரியகோஷ்டியைச் சேர்ந்த கணேசன் மகன் அப்பாசாமி (24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகள் அபிராமி (22) ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அபிராமி தற்போது அப்பாசாமியை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார். திருமணம் செய்து கொள்ள அப்பாசாமி மறுத்துள்ளார். இதுகுறித்து அபிராமி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப் பதிந்து வாலிபர் அப்பாசாமியை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...