டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்: ராமதாஸ்

தமிழகத்தில் சாலை விபத்துகள் மூலம் ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகின்றனர். இந்த விபத்துகளுக்குக் காரணம் மதுதான்.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.ஆனால் அரசு மூட மறுத்து வருகிறது.மதுக்கடைகளை மூடினால்

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:09 am

அரவிந்தன்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பாமக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் சாலை விபத்துகள் மூலம் ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகின்றனர். இந்த விபத்துகளுக்குக் காரணம் மதுதான்.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.ஆனால் அரசு மூட மறுத்து வருகிறது.மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்கின்றனர்.  இப்போதும் கள்ளச் சாராயம் இருக்கத்தான் செய்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு கள்ளச் சாராயம் குடித்ததில் 176 பெண்கள் உள்பட 451 பேர் பலியாகியுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.எனவே நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி உடனடியாக மூடாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுப்போம் என்றார்.

நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை மூடி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, சமூகநீதி பேரவை தலைவரும் வழக்குரைஞருமான பாலு உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.