நஷ்டஈடு தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
கோபியில் நஷ்டஈடு தொகை வழங்காத காரணத்தினால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.


கோபியில் நஷ்டஈடு தொகை வழங்காத காரணத்தினால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கோபியை அடுத்த சின்னக்கொடிவேரி கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி மகன் விஜயகுமார்(21). கட்டிடத் தொழிலாளி. இவர் கடந்த 2007 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ம் தேதி கோபி-சத்தி மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூலவாய்க்கால் என்ற இடத்தில் எதிரில் வந்த அரசு டவுன் பஸ் விஜயக்குமார் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கோபி அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஜயக்குமார் கடந்த 2007 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து கோபி 3 வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2008 ம் ஆண்டு அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி கிருஷ்ணன் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ம் தேதி விஜயக்குமார் குடும்பத்தினருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்ட ஈடாக ரூ.5 லட்சத்து 14 ஆயிரத்து 552 மற்றும் செலவு தொகை மற்றும் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன் பின்னர் கடந்த 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னரும் நஷ்டஈடு தொகை வழங்காமல் அரசுப் போக்குவரத்துக் கழகம் இருந்ததால், கடந்த 2013 ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ம் தேதி நீதிபதி கிருஷ்ணன் அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் கோபி பஸ் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை மதுரை செல்ல தயாராக இருந்த அரசு பஸ் ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் பயணிகளை இறக்கிவிட்டு ஜப்தி செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...