சிதம்பரம் அருகே உள்ள விபிஷீணபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்த திருஞானம் (52). இவர் சிதம்பரம் வடக்குமெயின்ரோட்டில் சித்தமருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று(சனிக்கிழமை) இரவு மருத்துவமனையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார் அப்போது சிதம்பரம் மேலவீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடை ஒன்றில் டீ சாப்பிட்டுவிட்டு திரும்பி பார்த்த போது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு ரூ.30ஆயிரம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த 3 செல்போன்கள் காணமல் போனது கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து புகாரி்ன் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.